Sukanya Suppor to Ramar Temple

ராமர் கோவில் பூஜை நடந்த நேற்று ராமர் முத்திரையோடு புகைப்படம் வெளியிட்டு உள்ளார் சுகன்யா.

Sukanya Support to Ramar Temple : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

தற்போது ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இறுதியாக சேரன் இயக்கத்தில் வெளியான திருமணம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

நேற்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூஜை நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய நெற்றியில் ராமர் முத்திரையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.