அரபிக் குத்துப்பாட்டுக்கு சன் ஆட்டம் போட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.

Sujitha Dances to Arabic Kuthu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திலிருந்து சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாகியிருந்த அரபிக் குத்து என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது பல திரையுலக பிரபலங்கள் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தனம் வேடத்தில் நடித்து வரும் சுஜிதா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல்வேறு படங்களில் சுஜிதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.