Suja Varunee Baby : Suja and Shivakumar Blessed With Boy Baby | Bigg Boss Tamil | Suja Varunee Family | Suja Shivankumar Family
பிக் பாஸ் சுஜா வருணிக்கு ஆன் குழந்தை பிறந்து உள்ளதால் அவர்கள் குடுபத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Suja Varunee Baby : பிக் பாஸ் என்றாலே பிரச்சனை மட்டுமே நினைவுக்கு வரும் இந்த நேரத்தில் ஒரு நல்ல செய்தியும் வந்து உள்ளது.

சென்ற சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தவர் சுஜா வருண். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு அவரின் நீண்ட நாள் காதலரான சிவக்குமாரை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தனது வளைகாப்பு நிகழ்ச்சியின் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

சூர்யா பக்கம் திரும்பிய பா.ஜ.க-வின் பார்வை – என்னவெல்லாம் திட்டி இருக்காங்க பாருங்க.!

மேலும், “சிவக்குமாரை கணவராகவும் அவரின் குடும்பத்தை சொந்தங்களாக அடைந்தற்கு நான் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று பதிவு செய்து இருந்தார்.

அதனை தொடர்ந்து, நேற்று இரவு சுஜா தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த தகவலை சுஜாவின் கணவர் சிவக்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என் சிம்ஹா வந்து விட்டான்.

மேலும் இந்த நாளிலே என்னுடைய ‘பிங்கர் டிப்’ என்ற வெப் சீரிசும் தொடங்குகிறது.” இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது என்றும் பதிவு செய்து இருந்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.