விடுதலை படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறனுடன் இருக்கும் சுதா கொங்குரா புகைப்படம் புதிய தகவலுடன் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் தற்போது இரண்டு பாகங்களாக விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் முதல் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இயக்குனர் சுதா கொங்குரா இணைந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் நெருங்கிய நண்பரான இயக்குனர் சுதா கொங்குரா படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார். அப்போது வெற்றிமாறனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்ட சுதா கொங்குரா ‘விடுதலை திரைப்படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு இதுதான்’ எனக் குறிப்பிட்டு உறுதியான புதிய தகவலையும் பகிர்ந்து இருக்கிறார்.