Sudha Kongara Upcoming Movie

சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sudha Kongara Upcoming Movie : தமிழ் சினிமாவின் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற படத்தினை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து தங்கம் என்ற வெப்சீரிஸ் தொடரை இயக்கினார். இந்த நிலையில் இவர் அடுத்ததாக தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது சுதா கொங்கராவின் படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் பிரபாசை இயக்க இருப்பதாகவும் அவருக்கு கதை ஒன்றைக் கூற அந்த கதை ஒன்றை கூற அது பிடித்துப்போக இந்தப் படத்தின் அடுத்த கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.