Vijay 65
தளபதி 65 படத்திற்காக முதல் முறையாக விஜய் பெண் இயக்குனருடன் கை கோர்க்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை காட்டிலும் தளபதி 65-ஐ யார் இயங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் கூட விஜய் தனக்கு கதை கூறிய 10 இயக்குனர்களில் இருவரை தேர்ந்தெடுத்து விட்டதாகவும் அவர்கள் கோமாளி இயக்குனர் பிரதீப் மற்றும் பேரரசு என தகவல்கள் வைரலாகின, அதனை நம் தளத்தில் கூட குறிப்பிட்டு இருந்தோம்.

இந்நிலையில் யூ ட்யூப் திரைப்பட விமர்சகர் ஒருவர் எனக்கு கிடைத்த தகவலின் படி தளபதி 65 படத்தை பாண்டிராஜ் அல்லது சுதா கொங்கராவ் தான் இயக்க போவதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.