Sudeep Kishan Tweet About Covid19

கொரானா வைரஸ் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ நாங்கள் தயாராக இருப்பதாக மாநகரம் பட நடிகர் தெரிவித்துள்ளார்.

Sudeep Kishan Tweet About Covid19 : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் அதி தீவிரமாகப் பரவி மிகப்பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. சாதாரண மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரானாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ நாங்க ரெடி - மாநகரம் பட நடிகர் அதிரடி பதிவு

வயது முதிர்ந்தவர்கள், உடலில் ஏற்கனவே பிரச்சனை இருப்பவர்கள் கீழே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரை இழந்து வரும் சோகமும் தொடர் கதையாகி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தில் நடித்திருந்த சந்தீப் கிஷன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை பிறந்த குழந்தைகள் யாராவது இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள ஈமெயில் முகவரிக்கு தகவல் தெரிவியுங்கள். அந்த குழந்தைகளின் உணவு கல்வி ஆகியவற்றை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாங்கள் கவனித்து கொள்கிறோம். எங்களால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி செய்கிறோம் என தெரிவித்துள்ளார். ‌‌

கொரானாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ நாங்க ரெடி - மாநகரம் பட நடிகர் அதிரடி பதிவு