
சாம்பார் ருசியில்லை என கணவன் கூறியதால், மனமுடைந்து மனைவி தன் இரு குழந்தைகளோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சூரிபாபு(28), இவரது மனைவி தேவமணி(26). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மல்லிகார்ஜுன்(3) மற்றும் மகள் (7மாதம்).
கடந்த 9 – ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சூரிபாபு சாப்பிட தொடங்கினார். அப்போது, சாம்பார் ருசியாக இல்லை என்று தகராறு செய்துள்ளார்.
இதில் மனவேதனை அடைந்த தேவமணி, நேற்று முன்தினம் சூரிபாபு வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில், தேவமணி தன் குழந்தைகளை அழைத்து சென்று, மழைநீர் கால்வாயில் வீசிவிட்டு, தானும் கால்வாயில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கங்கவரம் போலீசார், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கங்கவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.