Suchithra Evicted From Bigg Boss4

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Suchithra Evicted From Bigg Boss4 : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை நிகழ்ச்சியிலிருந்து ரேகா, வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி என மூவர் வெளியேறியுள்ளனர். நான்காவது வெளியேற்றம் இந்த வாரம் நடைபெற உள்ளது.

இதற்கான நாமினேஷன் பட்டியலில் ஆரி, அனிதா, பாலாஜி முருகதாஸ், ரியோ, சுசித்ரா, ரம்யா பாண்டியன், கேப்ரெல்லா என 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் ஏற்கனவே சுசித்ரா மிகக் குறைந்த அளவில் ஓட்டுகளை பெற்று உள்ளார் என கூறி இருந்தோம். தொடர்ந்து அதே நிலை நீடித்ததால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது அவர் தான் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் சுசித்ரா ரகசிய அறைக்குள் அனுப்பப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.