Subiksha Wishes to KamalHaasan
Subiksha Wishes to KamalHaasan

கமல்ஹாசனின் 61 வருடத் திரைப் பயணத்தை பாராட்டும் விதமாக பரதநாட்டியம் ஆடி வாழ்த்து கூறியுள்ளார் சுபிக்ஷா.

Subiksha Wishes to KamalHaasan : தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு கொண்டவர்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான கமல் உலக நாயகனாக வளர்ந்து உச்சம் பெற்றுள்ளார். இவர் திரையுலகில் அறிமுகமாகி 61 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் பிரபலங்கள் பலரும் உலக நாயகனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இளம் நடிகையான சுபிக்ஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தசாவதாரம் படத்தில் இடம்பெறும் முகுந்தா முகுந்தா என்ற பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கலைத்தாயின் மகனான கமல்ஹாசன் அவர்களுக்கு கலையின் மூலமாகவே வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

நடிகை சுபிக்ஷா பரதநாட்டியத்திற்காக ஆடல் கலைமணி பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/tv/CDy3Hg8DV20/?igshid=14fibyiahd5hg

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.