Students Thanks to Tamilnadu CM

தமிழக முதல்வர் கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக ஏழை எளிய மாணவர்கள் பலரும் மருத்துவ கனவு நனவாகியுள்ளது. இதன் மூலம் பெற்றோரை இழந்த / விபத்தில் சிக்கி முழு முடக்கம் அடைந்த பெற்றோரின் குழந்தைகள் 5 பேரும் பயனடைந்துள்ளனர்.

Students Thanks to Tamilnadu CM : மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது என்பது கடினமான ஒன்றாக மாறியது.

இதனால் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் கட்டணம் இல்லாமல் மருத்துவ படிப்பு பயில ஏதுவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.

இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 400 ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். பள்ளி செல்லும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தையை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலும் அரசி அல்லது அரசு நிதியுதவி பள்ளிகளில் பைரவர் தன் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்கான கல்வி உதவித்தொகை 75 ஆயிரமாக உயர்த்தி உள்ளது.

தற்போது இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயில தேர்வாகியுள்ள மாணவர்களில் மேலே குறிப்பிட்டது போன்ற விபத்தில் பெற்றோரை இழந்தவர்களின் மாணவர்களும் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு பயில தேர்வாகியுள்ளனர். அவர்கள் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

அந்த மாணவர்கள் குறித்த விவரங்கள் இதோ

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தாணிவினை பகுதியை சேர்ந்த மாணவி ஆர். ஜெ நந்தனா.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட திக்குறிச்சி வருவிளாகம் பகுதியைச் சேர்ந்த மாணவி கே ரேஷ்மா.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் குமாரபுரம் பேர் ஆட்சிக்குட்பட்ட எரிச்சமூட்டுவினை பகுதியைச் சேர்ந்த மாணவி ஆஷிகா.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியம் புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட ஆலம்பாறையடி வீடு பகுதியைச் சேர்ந்த மாணவன் எஸ் எஸ் ராகுல் வர்ஷன்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் பத்மநாபம் நகராட்சி மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த செல்வன் எம் கே அப்துல் ரகுமான்.

இந்த ஐந்து மாணவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளனர்.‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.