கோப்ரா திரைப்படத்தை பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் கடிதம் மூலம் லீவ் கேட்டு லெட்டர் எழுதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகர் தான் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள “கோப்ரா” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் இப்படத்திற்கான போஸ்டர்ஸ் மற்றும் சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியான நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.

கோப்ரா திரைப்படத்திற்கு லீவு கேட்டு கடிதம் எழுதியுள்ள மாணவன்! - வைரலாகும் புகைப்படம் இதோ!!

சமீபத்தில் கோப்ரா திரைப்படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இப்படத்தின் நேர அளவு 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என குறிப்பிட்டுள்ளது. மற்ற படங்களை விட இப்படத்திற்கான நேர அளவு அதிகமாக இருப்பதினால் இந்த தகவல் இணையத்தில் வைரலானது. தற்போது அதே போல் இப்படம் குறித்து கடிதம் எழுதியுள்ள மாணவன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை பார்ப்பதற்கு லீவு கேட்டு கல்லூரி மாணவன் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கோப்ரா திரைப்படத்திற்கு லீவு கேட்டு கடிதம் எழுதியுள்ள மாணவன்! - வைரலாகும் புகைப்படம் இதோ!!

அதில் அந்த மாணவன், இப்படத்திற்கான முதல் நாள் டிக்கெட் கிடைத்துள்ளதால் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி செல்ல உள்ளோம்; எங்களை அழைக்க முயற்சிக்காதீர்கள், நாங்கள் கண்டிப்பாக கல்லூரிக்கு வர மாட்டோம் என்று எழுதியுள்ளனர் மேலும் அதில் எங்களிடம் எக்ஸ்ட்ரா டிக்கெட் ஒன்று உள்ளது விரும்பினால் நீங்களும் வரலாம் என அந்த கடிதத்தில் எழுதி இருக்கிறார். இந்த மாணவனின் வைரலான கடிதம் இணையத்தில் அனைவரையும் கவர்ந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கோப்ரா திரைப்படத்திற்கு லீவு கேட்டு கடிதம் எழுதியுள்ள மாணவன்! - வைரலாகும் புகைப்படம் இதோ!!