Student Comments on Medical Seats Allocation
Student Comments on Medical Seats Allocation

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்பை பயில 7.5% இட ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட நிலையில் மாணவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Student Comments on Medical Seats Allocation : நமது முதல்வர், கல்லூரி மாணவர்களின் மன உளைச்சலைக் கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெருவர் என அறிவித்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இதன் மூலம் தமிழக மாணவர்கள் மனதில் நீங்க இடம்பெற்று மாணவர்களின் ஹீரோவாக முதல்வர் எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதன் நீட்சியாக மாண்புமிகு தமிழக முதல்வரும், தமிழக அமைச்சர்களும், தமிழக ஆளுநருக்கு, இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டார்.

தமிழக முதல்வரின் இந்த வரலாற்று சிறப்புமிக்க அரசாணையை ஆமோதிக்கும் விதமாக மாண்புமிகு தமிழக ஆளுநர் இந்த 7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிகழ்வானது, மாண்புமிகு தமிழக முதல்வரின் அரசியல் சாதுர்யத்திற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்று அவருடைய அரசியல் எதிரிகளாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதன் மூலம்,”மாணவர்களே நாட்டின் வருங்கால தூண்கள்; அவர்களின் நலன் காப்பது ஒரு தலைவனின் தலையாய கடமை” என்பதற்குச் சான்றாக விளங்கி வரும் முதல்வருக்கு, மாணவர்கள் மட்டுமல்லாது, தமிழர்கள் அனைவரும் தங்களது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த அரசாணை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு குறித்த புரட்சித்தலைவர் MGR, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது கனவை நனவாக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்த பதிவின் கமெண்ட்டுகளில் பெரும்பாலானோர் நன்றி தெரிவித்து தான் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த அரசாணை எந்த அளவிற்கு வரலாற்று சிறப்புமிக்க ஒன்று என்பது நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.