Student Admission in Tamilnadu Schools :
Student Admission in Tamilnadu Schools :

Student Admission in Tamilnadu Schools : தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டன. இதனிடையே தனியார் பள்ளிகள் இணையதளம் மூலமாகவும் அரசுப்பள்ளிகள் தனியார் தொலைக்காட்சி மூலமாகவும் கல்வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.

இதைத்தொடர்ந்து இன்று அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குகிறது மேலும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் நோட்டு சீருடை மற்றும் கல்வி போன்ற பொருள்களை அரசின் வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது.

ஒன்றாம் வகுப்பில் சேர மாணவர்கள் நேரில் வரவில்லை என்றாலும் பெற்றோர்கள் தரும் ஆவணங்கள் அடிப்படையில் பள்ளியில் சேர்க்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பகுதியில் வசிக்கும், தடை நீக்கம் முடிந்ததும் சேர்க்கை நடைபெறும். அந்த மாணவர்களின் விவரங்கள் தொலைபேசியின் மூலம் பெறப்பட்டு சேர்க்கை உறுதி செய்யப்படும்.

ஒரு நாளைக்கு தலா 20 மாணவர்கள் பெற்றோர் உடன் அழைத்து மாணவர் சேர்க்கை செய்திட வேண்டும் அதற்கேற்ப கூடுதல் நாளையும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம்.

பள்ளியில் கிருமிநாசினி தெறிப்பது, சமூக இடைவெளி, முக கவசம், போன்றவற்றை முறையாக பின்பற்றி இந்த மாணவர் சேர்க்கை நடைமுறை செயல்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.