Stress Problems and Solutions :
Stress Problems and Solutions :

Stress Problems and Solutions :

மன அழுத்தம்:

* அதிக வேலைப்பளு ,தூக்கமின்மை ,குழந்தைகளின் படிப்பு சுமை, குடும்பத்தகராறு, தோல்விகள் இவை யாவும் மனிதனுக்கு, மன அழுத்த நோய் உருவாக காரணமாகின்றது.

*இன்று பலத் துறைகளில் அதிக வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை “ஜப்பான் ” மொழியில் “KOROSHI “அதிக வேலைப்பளு மரணம் என்கின்றனர்.

மன அழுத்தத்திற்கான முறையான தீர்வுகள்:

1. குறைந்தது 6 – 7 மணி நேரம் முழுமையான தூக்கம்.

2. தூங்குவதற்கு முன்பு சற்று நேரம் தியானம் மேற்கொள்வது சிறப்பு.

3. எளிய உணவு முறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.

4.மன அழுத்தத்தை போக்க உதவும் உணவு முறைகள்:

* மாதுளம் பழச் சாற்றில் சர்க்கரை ,ஐஸ் ,கலக்காமல் தேன் அருந்தி குடிக்கலாம். இது மன இறுக்கத்தை குறைக்க உதவும்.

* வாழைப்பழம், மூளையில் சுரக்கும் செரடோனின் சத்தை சீராக்கும் தன்மை கொண்டது. இவை மன அழுத்தத்திற்கும் மற்றும் உளவியல் நோய்கள் தீர்ப்பதற்கும் உதவுகிறது.

* தூங்குவதற்கு முன் பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை சேர்த்து அருந்துவதினால் நிம்மதியான தூக்கம் வரும்.

* தினமும் சீரக தண்ணீர் அல்லது வெட்டிவேர் கலந்த நீர் அருந்துவதால் மன அழுத்தம் குறையும்.

* தந்தூரி உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்ப்பது நல்லது.

* ஆவியில் வேக வைத்த உணவுகளை உண்பது சிறப்பு.

* செயற்கை நிறமூட்டிகள் ,செயற்கை ரசாயனம் கலந்த உணவுகள்,பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here