Simbu Review on Oru Kutti Kathai
விஜயின் ஒரு குட்டி கதையை கேட்டு STR தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

STR Review on Oru Kutti Kathai : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இருந்து ஒரு குட்டி கதை என்ற பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி யூ ட்யூபில் ஹிட் அடித்து வருகிறது.

இந்நிலையில் இப்பாடலை கேட்ட சிம்பு பாட்டு சூப்பராக இருப்பதாக கூறி பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜிடம் கூறியுள்ளார்.

இதனை அவர் ட்விட்டரில் பதிவு செய்து சிம்புவுக்கு நன்றி கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.