
STR : நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் வெளியாகி கொண்டே வருகிறது.
சிம்பு தற்போது மாநாடு படத்திற்கு அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் சர்ச்சை நாயகன் என்றாலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு பட ரி-மேக்கில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். மாநாடு படத்தை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது விண்ணை தாண்டி வருவாயா-2 இல்லை.
இது முழுக்க முழுக்க கமெர்சியல் படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
சுந்தர்.சி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்த மேகா ஆகாஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.