Simbu Next Movie
சிம்புவின் அடுத்த படம் பற்றிய அப்டேட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

STR Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் படப்பிடிப்பே பல போராட்டங்களுக்கு பிறகு சில தினங்களுக்கு முன்னர் தான் தொடங்கியது.

அதற்குள் சிம்புவின் அடுத்த பட இயக்குனர் யார் என்பது பற்றிய பேச்சு அடிப்பட தொடங்கி விட்டது. ஆம், சிம்புவின் அடுத்த படத்தை சேரன் இயக்கலாம் எனவும் அவர் சிம்புவுக்கு ஒரு கதையை கூறி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே சேரன் விஜய் சேதுபதியை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சிம்புவையும் இயக்க போவதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.