சிம்பு ரசிகர்களுக்கு அடுத்த ஹாப்பி நியூஸாக பத்து தல படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

STR in Pathu Thala Movie Shooting Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். மூன்று மாதங்களில் இந்த படத்தில் படப்பிடிப்புகளை நடத்தி முடிக்க கௌதம் மேனன் திட்டமிட்டு உள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

அந்த நிகழ்வு, எனக்கு வருத்தம் அளிக்கிறது : விராட்கோலி

மேலும் சிம்பு சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

மீண்டும் Kamal படத்தில் இணைந்த Andrea – படக்குழு மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்! | Vikram Movie

அதாவது இயக்குனர் கிருஷ்ணா முதலில் கௌதம் கார்த்திக்கை வைத்து ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பை துவங்க உள்ளார். அதன்பிறகு செய்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இதற்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.