STR in Next Movie With Mysskin
STR in Next Movie With Mysskin

சிம்புவின் அடுத்த பட இயக்குனர் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

STR in Next Movie With Mysskin : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் அந்த படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவிருப்பது உறுதியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

துரத்தி துரத்தி காதலித்த நடிகர் வேண்டாமென மறுத்த கீர்த்தி சுரேஷ் – யார் அந்த நடிகர்?

இயக்குனர் மிஷ்கினும் ஒரு ரகம் சிம்புவும் ஒரு ரகம் இவர்களுக்கிடையே எப்படி செட் ஆகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் இவர்களின் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.