செம சூப்பர் லுக்கில் நடிகர் சிம்பு இருக்கும் புகைப்படம் வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து வெளியாகியுள்ளது.

STR in New Look for VTK : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

இந்தப் படத்தைத் தொடர்ந்து வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். பெங்காலி நடிகை ஒருவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வரும் இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகர் சிம்பு சூப்பர் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.