STR Idea For Delta

STR Idea For Delta : காவிரி பிரச்னையை போல சிம்பு டெல்டா பிரச்சனையில் ஜெயித்து காட்டியுள்ளார். இதனால் சிம்புவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மக்கள் பலரும் இம்மாவட்ட மக்களுக்காக உதவி வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் உதவி வருகின்றனர். சாதாரண மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் எப்படி உதவுவது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்காக சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றின் மூலமாக ஐடியா கொடுத்திருந்தார். அதாவது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதற்கு வழி செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

தற்போது சிம்புவின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற நாங்கள் ரெடி என பிரபல நிறுவனமான ஐர்தேல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் இறுதிக்கட்ட முடிவிற்காக காத்திருக்க கூறியுள்ளார்.

மேலும் தமிழக அரசும் சிம்புவின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க தயாராக அறிவித்து குறிப்பிடத்தக்கது.