
15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணியை அமைக்கவுள்ளார் சிம்பு. அவருடைய புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
STR Combo With Vz Durai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது.
மேலும் ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் 10 தல என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் தற்போது இன்னொரு படம் பற்றி செம தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சிம்பு தொட்டி ஜெயா என்ற வெற்றி படத்தை கொடுத்த வி இசட் துரையுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

15 வருடங்களுக்கு பிறகு இந்த வெற்றிக் கூட்டணி அமைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.