Simbu Birthday Celebration

STR Birthday : சிம்பு முன்னணி திரையுலக பிரபலங்களுடன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ள வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வெளியான வந்தா ராஜாவாக தான் வருவேன் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டு வருகிறது.

இதனையடுத்து STR-க்கு இன்று பிறந்த நாள் என்பதால் ரசிகர்களின் கொண்டாட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

அதே சமயம் சிம்புவும் தன்னுடைய திரையுலக நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

குறிப்பாக இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா, சிம்பு, ஜெயம் ரவி, மேகா ஆகாஷ் என பலர் இப்படத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக வளையதள பக்கத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

மேலும் ரசிகர்கள் #HappyBirthdaySTR, #HBDSTR என்ற ஹேஸ்டேக்குகள் மூலமாக தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் கலக்கல் சினிமா டீமும் சிம்புவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் STR.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.