கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கி கொண்டு இருப்பவர் சிலம்பரசன். ஈஸ்வரன், மாநாடு வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு நடிப்பில் அடுத்ததாக பத்து தலை திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பது என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்குவது உறுதியாக உள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது. தற்காலிகமாக இந்த படத்திற்கு எஸ்டிஆர் 48 என பெயரிடப்பட்டது.இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

https://twitter.com/desingh_dp/status/1633815936758345730?t=QrhtbVLXkW__MWJHI3VazQ&s=19