STR 45, Gautam Karthik

STR 45 : இளம் நடிகருடன் சிம்பு இணைந்து நடிக்க இருப்பதாக சிம்பு 45 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த சிம்பு இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.

பொதுவாக தமிழில் இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படங்கள் உருவாவது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படியான முயற்சியில் தான் சிம்பு இறங்கியுள்ளார்.

ஆம் தன்னுடைய அடுத்த படத்தில் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்க உள்ளார் சிம்பு. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.