Stephen Fleming Open Talk | Chennai Super Kings Coach | MS.Dhoni | Raina | Kollywood | Tamil Cinema | Stephen Fleming | Chennai

Stephen Fleming Open Talk :

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டோடு 12 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

10 வருடங்கள் முடிந்து கடந்த வருடம் 11-வது சீசனின்போது வீரர்கள் அனைவரும் பொது ஏலம் மூலம் எடுக்கப்பட்டனர். நான்கு வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரையும் 8 அணிகள் ஏலம் மூலமே எடுத்தது.

சூப்பர் டீலக்ஸ் ஷில்பாவுக்கு அஜித் தான் இன்ஸ்பிரேஷன் – இயக்குனரின் அதிரடி கருத்து!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் அனுபவ வீரர்களை தேர்வு செய்தது. இதனால் ‘Daddy Army’ என்றும் ‘Ageing Squad’ என்றும் அழைத்தனர். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை சந்தித்தது.

இந்த சீசனில் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை நழுவவிட்டது சென்னை அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியிடம் கண்ட தோல்வி மற்றும் ஃபார்ம் குறி்த்து பயிற்சியாளர் சில மாற்றங்கள் சென்னை அணிக்கு தேவை என்று தெரிவி்த்துள்ளார்.

மேலும் சென்னை அணியின் சராசரியே 34 ரன்கள்தான். இதனால் அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி தோல்வி குறித்த காயம் குறைய சற்று நேரம் கொடுக்க வேண்டும்.

நாங்கள் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளோம். 2-வது முறை இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளோம். இரண்டு வருடங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. சிஎஸ்கே ஒரு ‘Ageing Team’ என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மீண்டும் சிறந்த அணியை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். தோனியும் இதே எண்ணத்தில் உள்ளார்.

தோனி உலகக்கோப்பை தொடரில் விளையாட செல்கிறார். உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் அடுத்த சீசன் குறித்து திட்டமிடப்படும்’’ என்றார் சென்னை அணியின் பயிற்சியாளர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.