MK Stalin

முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ள புதிய திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் ஸ்டாலின் செய்த செயல் பலரையும் விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

Stalin’s New Statrergy : ஸ்டாலின் மக்கள் குறைகளை 100 நாட்களில் தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளர். இதன் மூலம் தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏக்கள் 108 பேர் தங்களது தொகுதியில் ஒன்றுமே செய்யவில்லை என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியிலேயே மக்களை குறைகளை தீர்க்கவில்லை, இவர் தமிழக மக்களின் குறைகளை தீர்க்க போறாரா?

ஸ்டாலினுக்கு அரசு நிர்வாகம் எவ்வாறு இயங்குகிறது என்றே கூட தெரியாது. அரசின் எல்லா துறைகளிலும் குறைதீர் மையம் செயல்படுகிறது. மூன்று முதல் 30 நாட்களில் அனைத்து குறைகளும் தீர்க்கப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான குறைகள் 3 நாட்களிலும் பெரிய குறைகள் 30 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படுகிறது.

மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் தனி குறைதீர் மையம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட சபையில் அறிவித்தார். அது தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுதப்பட்டு வருகிறது.

இத்திட்டம் அடுத்த வாரம் நடைமுறைக்கு வருவதை அறிந்து கொண்ட ஸ்டாலின் இதற்கு நிகராக தான் ஒரு திட்டத்தை செயல்படுத்த போவதாக நாடகத்தை நடத்துகிறார். தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் அரசியல் லாபத்திற்காக இதனை கையில் எடுத்துள்ளார், இத்தனை நாட்கள் ஸ்டாலின் என்ன செய்திட்டிருந்தார்.

தேர்தல் சமயங்களில் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சும் தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சும் பேசுவது ஸ்டாலினின் வாடிக்கை. கடந்த தேர்தலில் தன்னுடைய குடும்பத்தார் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொன்னார். அதே ஸ்டாலின் தேர்தலுக்கு பின் அவருடைய மகன் உதயநிதிக்கு இளைஞரணி செயலளர் பதவி கொடுத்து, தி.மு.க தலைவர்கள் அவரது காலில் விழும்படி செய்தார். தற்போது அவருக்கு எம்.எல்.ஏ சீட்டும் கொடுக்க போறாரு. இந்த வாக்குறுதியும் அப்படித்தான், தேர்தல் முடிந்ததுக்கு அப்புறம் என்னவாகும் என யாருக்கும் தெரியாது.

தி.மு.கவினர் ஸ்டாலின் வர்றார்னு தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிச்சிருக்காங்க. நாட்டிலேயே நான் வர்றேன், நான் வர்றேன் சொலிட்டே இருக்கிற ஒரே கட்சித் தலைவர் ஸ்டாலின் தான். வர்றார்னு மக்கள் தான் சொல்ல வேண்டும், நாம சொல்ல கூடாது. நானும் ரெளடிதான் நானும் ரெளடிதானு சொல்லற காமெடிதான் நினைவுக்க்கு வருது.

2011லிருந்து தேர்தலுக்கு முன்னாடி என்ன பிரச்சனை என்ன பிரச்சனைனு கேட்டுட்டு கிளம்பிடுவாரு. ஆனா தமிழக மக்களுக்கு என்ன வேண்டும் அவர்களுடைய குறைகள் என்வென்று இதுவரை அவருக்கு புரியவும் இல்ல, இதுக்கு மேல தெரியவும் போறதில்ல.

ஏதோ சங்கரின் படத்தில் வருவது போல, புகார் பெட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, அதில் மக்கள் புகார்களை அளித்தால், குறை தீர்க்கப்படும் என முதல்வன் பட பாணியில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதற்கு எங்கிருந்து பணம் வரும் என்று ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டால், அதற்கு ஸ்டாலினிடம் பதில் இல்லை என ஸ்டாலினை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.