mk.stalin Speech : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Tamilnadu Election, udhayanithi
மக்களை பாதிக்கும் படி இனிமேல் திமுகவினர் பேனர்களை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Stalin warning to dmk party members on banner – சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணை சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று கீழே விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியானார். இதற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?’ என பதிவிட்டிருந்தார்.

banner

அதற்கு திமுக கட்சியினர் மட்டும் பேனர் வைப்பதில்லையா? அதை ஏன் நீங்கள் கண்டிப்பதில்லை என தாறுமாறாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை…

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒரு டிவிட் செய்துள்ளார். அதில் ‘நான் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியபடி திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்படி பேனர் வைத்தால் எந்த நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்க மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.