Stalin slam TN Budget
Stalin slam TN Budget

Stalin slam TN Budget – சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதில் தமிழக பட்ஜெட், ஏழை எளிய மக்களுக்கு உதவாத, ஒன்றிற்கும் உதவாத பட்ஜெட் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் நிகழ்வில், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

பின்னர் சட்டசபை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ‘இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன்பட முடியாத ஒரு உதவாக்கரை பட்ஜெட்டாக உள்ளது.

வளர்ச்சிக்கு செலவு செய்ய வேண்டிய அரசு, வாங்கியக் கடனுக்கு வட்டியை செலுத்துவதைத்தான் இந்த பட்ஜெட் தெளிவாகக்காட்டுகின்றது’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை தமிழக அரசு அளித்திருக்கின்றது.

அது மட்டுமின்றி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கான எந்த அறிவிப்பும் அரசு வெளியிடப்படவில்லை என்று விமர்சனம் செய்தார்.,

ஏற்கனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1 கோடி படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் பட்ஜெட்டில், எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது .

மாநில அரசினுடைய கடன், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகமாகி நிதி மேலாண்மை ஒரு மோசமான தோல்வியை சந்திக்கக்கூடிய நிலையில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கின்றது என்று கூறினார்.

இவ்வாறு தமிழக அரசின் பட்ஜெட் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்துள்ளார்.