
Stalin angry Speech – திருச்சி: திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “கஜா புயலால் தமிழகத்தில் உள்ள 7மாவட்டங்கள் நிர்மூலமாகிவிட்டது.
இந்நிலையில், மாநில அரசு நிவாரண நிதி கேட்கும் முன்னரே, மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்கி இருக்கவேண்டும்.
இதற்கு முன்னர், தமிழகத்தில் ஏற்கனவே 3 முறை புயல் தாகியபோதும், மத்திய அரசு எந்தவித போதுமான நிதியையும் வழங்கவில்லை”.
மேலும், மாநில அரசுக்கு தேவையான நிவாரண பணிகளை விரைவில் செய்து தரவில்லை என்றால், மத்திய அரசிடம் தமிழக அரசு வாதாடி உரிய புயல் நிவாரண நிதியை பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் புயல் பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் ரூ.4 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கபட்டுள்ளது என்று கூறினார்.
கஜா புயலை நாங்கள் அரசியல் ஆக்குவதாக கூறப்படும் தகவல் தவறானது, நாங்கள் இதில் அரசியல் செய்யவில்லை.
மேலும் மீனவர்கள் மற்றும் விவசாயிகளை நேரில் சென்று முதல்வர் ஏன் அவர்களின் குறைகளை கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர், முதல்வர் எடப்பாடி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.