Stalin and Vijay : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Thalapathy Vijay-DMK leader MK Stalin in one frame

Stalin and Vijay :

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்று திமுக இளைஞரணி செயலாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

திமுகவை சேர்ந்த மு.க.செல்வியின் பேத்தியான ஓவியாவின் நிச்சயதார்த்த விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் பொருளாளர் துரைமுருகனும் கலந்து கொண்டனர்.

இதில் திமுக தலைவர் ஸ்டாலினும், நடிகர் விஜயும் சந்தித்து கொண்டனர். மேலும் 3 நிமிடங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து, தமிழக அரசியலில் நிறைய விவாதங்கள் எழுந்தது. மேலும் இந்த சந்திப்பு குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “நடிகர் விஜய் திமுகவில் தாராளாமாக சேர்ந்து கொள்ளட்டும்.

திமுக யாரை சேர்க்க நினைத்தாலும் சேர்க்கட்டும். அதிமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து குறைந்துள்ளது. இதனால் விஜய் மற்றும் ஸ்டாலின் இருவரும் சந்தித்துள்ளனர்” என கூறியிருந்தார்.

இணையத்திலும் இவர்களின் சந்திப்பு தொடர்பாக நிறைய விவாதங்கள் நடந்தது. ரஜினிக்கு போட்டியாக விஜயை திமுக தங்கள் பக்கம் இழுக்க பார்க்கிறதா, சட்டசபை தேர்தலுக்கான முன்னெடுப்பாக இந்த சந்திப்பு இருக்குமா(?!) போன்ற பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: இது குடும்ப விழா… அரசியல் விழா கிடையாது. இந்த விழாவிற்கு பலரை அழைத்து இருந்தோம்.

எங்களது குடும்ப விழாவுக்காக நடிகர் விஜய் வந்திருந்தார் தவிர, இதில் அரசியல் எதுவும் கிடையாது. இது ஒரு எதார்த்தமான சந்திப்பு தான்., அதை அரசியலாக்குவது தவறு, அது ஒரு அறியாமை., இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.