தளபதி விஜயின் வாரிசு படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் எப்போது என தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் எதிர்பாராத அளவிற்கு எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது.

சிங்கிள் டிராக் ரிலீஸ் எப்போது?? நள்ளிரவில் இசையமைப்பாளர் தமன் கொடுத்த தரமான அப்டேட் - வைரலாகும் பதிவு

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் நடிக்கப் போகிறார்.

இதுவரை வாரிசு படத்தில் போஸ்டர்கள் மட்டுமே வெளியான நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

இது குறித்து இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் நள்ளிரவில் தீபாவளி என பதிவு செய்துள்ளார். இதன் மூலம் வாரிசு பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா என எதுவும் நடைபெறாத நிலையில் வாரிசு படத்திற்கு அனைத்தும் படுமாஸாக நடக்கும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிங்கிள் டிராக் ரிலீஸ் எப்போது?? நள்ளிரவில் இசையமைப்பாளர் தமன் கொடுத்த தரமான அப்டேட் - வைரலாகும் பதிவு

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு எஸ் எஸ் தமன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.