பதினொரு வருடங்களுக்கு முன்பாகவே பொன்னியின் செல்வன் படம் பற்றி பேசியுள்ளார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி.

தமிழ் மொழியில் கல்கி எழுத்தில் உருவான பிரம்மாண்ட கதை தான் பொன்னியின் செல்வன். வரலாற்று சிறப்புமிக்க இந்த கதையை படமாக்க வேண்டும் என பலர் முயற்சி செய்து முடியாமல் போனது.

11 வருடங்களுக்கு முன்பாகவே பொன்னியின் செல்வன் பற்றி பேசியுள்ள ராஜமவுலி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க

இப்படியான நிலையில் மிகப்பெரிய முயற்சியால் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கி முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தெலுகு ரசிகர்கள் பலர் இந்த படம் பற்றி ஏளனமாக பேசி வருகின்றனர்.

இது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி 11 வருடங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் படம் பற்றி பேசியுள்ள விஷயம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது தமிழ் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என கேட்க படித்திருக்கிறேன் மிகவும் அற்புதமான கதாபாத்திரங்களை கொண்ட அழகான கதை என தெரிவித்துள்ளார்.

11 வருடங்களுக்கு முன்பாகவே பொன்னியின் செல்வன் பற்றி பேசியுள்ள ராஜமவுலி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க

எஸ் எஸ் ராஜமவுலி கடந்து 2011 ஆம் ஆண்டு இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்த நிலையில் அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பொன்னியின் செல்வன் படம் பற்றி ஏளனமாக பேசும் தெலுகு ரசிகர்களுக்கு இந்த பதிவு ஒரு சாட்டையடி என பலரும் கூறி வருகின்றனர்.

Author – Vivek Amirthalingam