ஸ்ருதிஹாசனின் உடல் நிலையை குறித்து பல வதந்திகள் பரவி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளாவார். தமிழ் சினிமாவில் ‘ஏழாம் அறிவு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதில் கிடைத்த வெற்றியின் மூலம் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்கள் நடித்திருந்தார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘லாபம்’ திரைப்படம் ரசிகர்களின் இடையே கதவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சத்யா சன் எப்போதும் அவரின் instagram பக்கத்துல ஆக்டிவாக பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதேபோல் அண்மையில் தனக்கு பி.சி.ஓ.எஸ் என்ற பிரச்சனை இருப்பதாக கூறி இருந்தார். இந்த பிரச்சனையால் ஸ்ருதிஹாசனின் உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் தீயாக பரவியது.

இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தான் நன்றாக இருப்பதாகவும் என்னுடைய உடலில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் சுருதிஹாசனின் உடல் நிலை சீராக உள்ளது என்று அனைவருக்கும் தெரியவந்துள்ளத. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.