காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுருதிஹாசன்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலிருந்து அனைவருக்கும் பரிச்சயமான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின் களில் ஒருவராக இடம் பிடித்தார். அதன் பிறகு தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது பழமொழிகளில் வெளியாக இருக்கும் “சலார்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தனது காதலர் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகருடன் மும்பையில் லிவிங்க் டூ கெதர் முறையில் வாழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன் தனுஷ் உடனான காதல் வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சுருதி ஹாசன். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் தீயாக பரவியது. அந்த வதந்திகள் தற்போது வரை நீங்காமல் இருந்து வருவதால் கடுப்பான சுருதிஹாசன் தற்போது அதற்கு விளக்கம்

அளித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதில் அவர், இந்த வதந்தி மட்டுமல்ல, என்னைச் சுற்றி ஏராளமான வதந்திகள் சூழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. 3 படத்தின்போது யாரும் என் நடிப்பில் மீது நம்பிக்கை வைக்காதபோது தனுஷ் என் மீது நம்பிக்கை வைத்தார். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். என் உடலில் மைக்ரோ சிப் பொருத்தி அனைவரிடமும் என்னால் விளக்க முடியாது” என ஸ்ருதி தெரிவித்துள்ளார்.