Actor Sriman About Vijay
தளபதி விஜய் விக் அணிகிறாரா? என்ற கேள்விக்கு மாஸ்டர் பட நடிகர் மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.

Sriman About Actor Vijay  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்து முடிந்தது.

இந்த விழாவை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள் அனைவரும்.

என் கூட நடிக்க ஓகேவானு கேட்ட விஜய்.. நாளே வார்த்தையில் ஆப் செய்த விஜய் சேதுபதி – அப்படி என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீமனிடம் ரசிகர் ஒருவர் விஜய் விக் அணிகிறாரா என ட்விட்டரில் கேள்வி எழுப்ப அதற்கு ஸ்ரீமன் பதிலளித்துள்ளார்.

அதாவது விஜய் அணியலாம், அணியாமலும் இருக்கலாம். அப்படியே அணிந்தாலும் அது படத்திற்காக தான் இருக்கும். இப்போதைக்கு எதையும் பேசாதீங்க, படத்தை பாருங்க. கொரானா வைரஸில் இருந்து தப்பிக்க பிராத்தனை பண்ணுங்க என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.