SriDivya in Telungu Serial

சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் சீரியல் நடிகை.

SriDivya in Telungu Serial : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. அதன் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் காக்கிச்சட்டை என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் முதன்முதலாக தெலுங்குவில் ஒளிபரப்பான thoorpu velle railu என்ற சீரியலில் நடித்துள்ளார்.

இந்த சீரியலில் ஸ்ரீதிவ்யா நடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதிவ்யா சீரியல் நடிகையா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.