Sridhar Dance Master Talk About Vijay
தளபதி விஜய் பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு பதில் நடந்து வந்தாலே போதும் என்று பிரபல நடன இயக்குனர் கூறியுள்ளார்.

Sridhar Dance Master Talk About Vijay : விஜய் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை உருவாக்கி உள்ளார். இவரின் நடனம் இவருக்கு பக்க பலமாக எப்பொழுதும் இருக்கிறது.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாக உள்ள படம் பிகில். இந்த படம் பெண்களின் கல்பாந்து விளையாட்டை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டது.

தளபதி 64-ல் கமிட்டான இன்னொரு நாயகி? யார் தெரியுமா .?

இவரின் தெறி படத்தில் அறிமுக பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர் மாஸ்டர் பேட்டி ஒன்றில் தளபதியின் நடனத்தை பற்றி கூறியுள்ளார்.

தளபதி விஜய் அவர்கள் நடனத்தில் தான் யார் என்பதை முன்பே நிரூபித்து காட்டிவிட்டார், தொடர்ந்து அதை நிரூபிக்க வேண்டியது இல்லை.

அவரின் ரசிகர்களுக்கும் அது தெரியும், அவர் சும்மாவே கை அசைத்து வந்தாலே அவரின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தெறி படத்தின் “ஜித்து ஜில்லாடி” படத்திற்கு இவர் தான் நடன இயக்குனராக பணியாற்றினார், இந்த பாடல் தொழில்நுட்ப முறையில் நடனத்தில் தளபதியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here