
நடிகரும் இயக்குனருமான ராகவா ராலன்ஸின் அடுத்த படத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி கமிட்டாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டி வந்தார்.
இதில் ராணாவின் தம்பியான அபிராம், நடிகர் நானி மற்றும் எழுத்தாளர் கோனா வெங்கட் ஆகியோர் ஸ்ரீ சிக்கி இருந்தனர்.
இதனையடுத்து தமிழ்த் திரையுலகிலும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீ ரெட்டி முகநூல் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் சமீபத்தில் தான் ராகவா லாரன்ஸை அவரது வீட்டில் சந்தித்ததாகவும் அவரை சுற்றி குழந்தைகள் நிறைய பேர் இருந்ததாகவும் அவர்கள் தனக்காக பிரார்த்தனை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அதன் பிறகு ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வான எனக்கு லாரன்ஸ் தன்னுடைய அடுத்த படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக உறுதியளித்து அதற்கான அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.
ஸ்ரீ ரெட்டியின் இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் தற்போது லாரன்ஸ் மீதான கோபம் என்னவானது? எல்லாம் வாய்ப்புக்காக நடத்திய நாடகம் தானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.