
Sri Lanka : இலங்கை நாடாளுமன்றத்தில் ரணீல், மற்றும் ராஜபக்சே ஆதரவு, எம்.பிக்களிடையே திடீர் மோதலை உண்டாக்கியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசும்போது, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர் என்று கூறி, கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு தொடங்கியது. இலங்கையில் நாடாளுமன்ற கலைப்புக்கு கோர்ட் தடை விதித்தது,
மேலும் நேற்று நடந்த கூட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று 2வதாக கூடிய பாராளுமன்ற கூட்டத்தில், ராஜபக்சே பேசும்போது இவரது உரைக்கு அனுமதி வழங்க கூடாது என்று ரணில் எம்.பிக்கள் குரல் கொடுத்தனர்.
இருப்பினும், ராஜபக்சே தொடர்ந்து பேசினார். அதில் ” பதவி எனக்கு பெரிதல்ல, ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம் தீட்டிய சதி எனக்கு கிடைத்ததை அடுத்து, நான் நாட்டை நேசிக்கும் காரணத்தால், நாட்டை காப்பாற்ற அந்த பொறுப்பை ஏற்றேன்”, என்று கூறினார்.
மேலும் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்ற எம். பிக்கள் அவரை முற்றுகையிட்டு குரல் கொடுத்தனர். சிலர் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர், ராஜபக்சே, ரணில் ஆகியோர் அவையில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.