Krishna

#மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் 35 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தார் என்றும், தன்னுடைய 125 ஆவது வயதில் தான் ஸ்ரீ கிருஷ்ணர் இறந்தார் என்றும், அவர் 88 வயதில்தான் இறந்தார் என்றும், அவரின் மரணத்தை பற்றிய நிறைய வாக்குவாதங்கள் உண்டு. அவரின் மரணம் அவருடைய வயது நிரூபிக்கப்படாத ஒன்றாகவே இருக்கின்றது.

#கண்ணன் இறப்பதற்கு முன்னர் யாதவ குலமே ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு மடிந்தனர். அதனை பார்த்துவிட்டுதான் கண்ணன் மறைந்தார் என்கிறது பகவத் புராணம்.

#யாதவ குலமே அழிந்து, அதனால் மனமுடைந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவரை கடந்து சென்ற ஒரு வேடன் அவரை மான் என தவறாக நினைத்து விட்டான். கிருஷ்ணர் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டிருந்தார்.

# ஏற்கனவே சாபம் பெற்ற இரும்புத்துண்டிலிருந்து செய்யப்பட்ட அம்பை, அந்த வேடன் கிருஷ்ணர் மீது எய்தான். தன் ஆன்மாவில் நுழைந்த அந்த அம்பு கிருஷ்ணரின் உயிரை பறித்தது. அவர் உடலை விட்டு ஆன்மாவும் பிரிந்தது. அந்த வேடன் வேறுயாருமில்லை. அவன்தான் முன்ஜென்மத்தில் வாலி.

# ராமாவதாரத்தில் இதே கண்ணன் தான் அவனை மறைந்திருந்து கொன்றான். இப்போது அந்த கணக்கு தான் கிருஷ்ணரிடம் வசூலிக்கப்பட்டு விட்டது. கண்ணனின் முன் ஜென்ம வினை முடிவிற்கு வந்தது.

கிருஷ்ணரின் கடைசி ஆசை:
# துவாரகையின் அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அர்ஜுனன் துவாரகையிலிருந்து ஹஸ்தினாபுரம் அழைத்துச் சென்று காப்பாற்றினார் பின்னர் துவாரகை கடலில் மூழ்கியது இதனால் கிருஷ்ணரின் கடைசி ஆசையும் நிறைவேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here