Sri Devi Daughter

Sri Devi Daughter : அஜித் படத்தின் மூலமாக ஸ்ரீ தேவி மகள் தமிழுக்கு வருவதாக வெளியான தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் ஜான்வி கபூர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர் தயாரிக்க உள்ளார். படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா ட்ரையாங், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு நடிகையாக ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது இது குறித்து ஜான்வி கபூர் கூறியிருப்பதாவது, அந்த தகவலில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.