தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு அறிவில்ல பா என விஜய் ரசிகரை கைதி பட தயாரிப்பாளர் கலாய்த்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜயின் பிகில் திரைப்படமும் கார்த்தியின் கைதி திரைப்படமும் தீபாவளி விருந்தாக ஒரே நாளில் மோதிக் கொள்ள உள்ளது.
இதனால் இரு தரப்பு ரசிகர்களும் ட்விட்டரில் எலியும் பூனையுமாக சண்டையிட்டு வருகின்றனர், விஜய் ரசிகர்கள் அடிக்கடி கைதி பட தயாரிப்பாளாரிடமும் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதும் அப்படி தான் விஜய் ரசிகர் ஒருவர் பிகில் டிக்கெட்டிற்கு பதிலாக கைதி டிக்கெட் புக் ஆகிடுச்சு என கூறி ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு கைதி பட தயாரிப்பாளர் தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, ஆனால் அறிவு இல்ல பா என கலாய்த்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் எஸ்.ஆர் பிரபுவிற்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ????
— S.R.Prabhu (@prabhu_sr) October 21, 2019