Spiritual Guidance : Every day the puja room should be replaced by water in a copper vessel, Spirituality, Aanmeegam news, Spiritual Guidance

Spiritual Guidance :

# நாம் தினந்தோறும் பூஜை செய்யும் போதும் பூஜைக்காக சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்காக எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு வைக்கலாம்.

# மண் பானையிலேயோ அல்லது செம்பு பாத்திரத்திலேயோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.

# பூஜை செய்யும் போது நமக்கு தெரிந்த அளவு மந்திரங்களை உச்சாடனம் செய்ய வேண்டும். அவ்வாறு மந்திரங்களை உச்சாடனம் செய்யும் போது அதில் இருக்கும் நேர்மறையான
அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். இவ்வாறு செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும்.

# எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. இரும்பு யமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது.

# வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

# ஒவ்வொரு நாளும் பூஜை அறையில் செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை மாற்றி விட வேண்டும்.

அந்த பூஜை செய்த தண்ணீரை, மறுநாள் வீட்டின் கூரையிலோ அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இதனால் வீட்டில் துர்சக்திகள் நுழைவது தடுக்கப்படும்.

அலங்காரம் செய்யும் போது சுவாமி தரிசனம் செய்யக் கூடாது ஏன்? தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்!

# பூஜையின்போது மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்விக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது.

# தினமும் மணியோசை எழுப்பி, செம்பு பாத்திரத்தில் நீரூற்றி வைத்து
பூஜை செய்பவர்களின் வீடுகளில் தெய்வ கடாட்சம் நிரம்பி, ஆரோக்கியமும் சகல சௌபாக்கியங்களும் பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here