Spicy Cauliflower Bites
Spicy Cauliflower Bites

Spicy Cauliflower Bites :

மலை நேரங்களில் இது போன்ற எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சுவையான ஸ்னக்ஸ் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

1. காலிஃப்லவர் – 600 கிராம்

2. வெங்காயம் – 1

3. பூண்டு – 10 பல்

4. இஞ்சி – சிறிய துண்டு

5. மிளகு தூள் – 1 ஸ்பூன்

6. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

7. கான்பிளர் மாவு – 3 ஸ்பூன்

8. மைதா மாவு– 3 ஸ்பூன்

9. தயிர் – 2 ஸ்பூன்

10. பிரட் – 4 துண்டு

11. சாட் மசாலா – 1 ஸ்பூன்

12. உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

காலிபிளரை நன்றாக சுத்தம் செய்து அதனை 10 நிமிடம் உப்பு சேர்த்து வெக வைத்துகொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு பிடி நறுக்கிய வெங்காயம், பூண்டு 6 பல் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், மைதா மாவு , கான் பிளர் மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் இதில் வெக வைத்த காலிபிளர் சேர்த்து தண்ணீர் தெளித்து கலந்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

4 பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். இத்துடன் மிளகு தூள், சேட் மசாலா, உப்பு, மைதா 1 ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்த காலிபிளரை தயாரித்த பிரட் பொடியுடன் கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் காலிபிளரை பொரிது எடுத்து பரிமாறினால் சுவையான காலிபிளர் பாப்கான் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here