சிம்புவை பாராட்டி பேசிய விஜய் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ராஷ்மிகா, குஷ்பூ, பிரபு, சரத்குமார், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

தீ தளபதி பாடலுக்காக சிம்பு செய்த செயலுக்கு… விஜய் பாராட்டியுள்ளார்.!

தமன் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் இணையதளத்தை தெறிக்க விட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் பகிர்ந்து உள்ள விஷயங்கள் ஒவ்வொன்றாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தீ தளபதி பாடலுக்காக சிம்பு செய்த செயலுக்கு… விஜய் பாராட்டியுள்ளார்.!

அந்த வகையில், நடிகர் சிம்பு பற்றி விஜய் பகிர்ந்து உள்ள சுவாரஸ்யமான தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விஜய் அவர்கள், இப்படத்தில் இடம்பெற்று இருந்த தீ தளபதி பாடலை நடிகர் சிம்பு ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெற்றுக்கொள்ளாமல் பாடி தந்துள்ளார் என்று மனமார சிம்புவின் பெருந்தன்மையை பாராட்டி இருந்தார். அதனை விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.