Spectacular Tips
Spectacular Tips

Spectacular Tips

1. வெள்ளரிக்காய் சாறு, உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாறு. இம்மூன்றினையும் நன்றாக கலக்கி காட்டன் பஞ்சினால் முக்கி எடுத்து, மூக்கில் தழும்பு உள்ள இடத்தில் தடவி காய்ந்த பின், முகம் கழுவிக் கொள்ளவும். ஒரு வாரம் தொடர்ந்து தினமும் இந்த முறையை பின்பற்றலாம்.

2. கலவை பேக்:

ஒரு ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு,

ஒரு ஸ்பூன் புதினா சாறு, 1/2 ஸ்பூன் எலுமிச்சை மற்றும் தக்காளி சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன்.

எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, உறங்கச் செல்வதற்கு முன் இந்த கலவையை உங்கள் முகத்தில் கண்ணாடி தழும்பு இருக்கும் பகுதிகளில் தடவி, மறுநாள் காலை, முகத்தைக் கழுவவும்.

3. தேன், ஓட்ஸ், மற்றும் பால்.
இந்த கலவையை நன்றாகக் கலந்து தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவவும்.
பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். கண்ணாடியால் உண்டான தழும்புகள் மறையும் வரை இதனைப் பின்பற்றி வரவும்.

4. உருளைக்கிழங்கு துண்டுகள்:

உருளைக்கிழங்கை நறுக்கி கண்ணாடித் தழும்புகள் உள்ள இடத்தில் அந்த துண்டுகளை வைத்து நன்றாகத் தேய்க்கவும்.

தினமும் தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவதால் அடுத்த சில நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும். இதேபோல் தக்காளித் துண்டுகள், வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்தும் தேய்க்கலாம்.

5. கற்றாழை ஜெல்:
கற்றாழை சாற்றை எடுத்து கண்ணாடியால் ஏற்பட்ட தழும்புகளில் தடவி வருவதால் தழும்புகள் விலகும். கற்றாழை ஜெல்லை எடுத்து தழும்பில் தடவி அரை மணி நேரம் அப்படியே விடவும். தினமும் இதனைச் செய்து வர தழும்புகள் மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here