ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் துணிவு திரைப்படம் குறித்து netflix நிறுவனம் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் எச.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பிரபல டிஜிட்டல் தலமான நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டிருந்ததை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படத்தின் ott ரிலீஸ் குறித்து ஸ்பெஷல் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அது தற்போது தல ரசிகர்களின் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.