தளபதி விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தின் சர்கார் கொண்டாட்டம் இன்று முதல் தொடங்க இருப்பதாக அதிரடி அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டு இருந்தது.

YouTube video

அதன்படி இன்றைக்கான முதல் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் வரும் செப்டம்பர் 24ம் தேதி மாலை 6 மணிக்கு சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புடன் நமக்கு மற்றொரு அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தில் நடித்து வரும் யோகி பாபு இன்று சர்கார் படத்திற்கான டப்பிங்கையும் முடித்து கொடுத்துள்ளார்.  ஏற்கனவே வெளியாகியுள்ள சர்கார் அப்டேட்டுடன் சேர்த்து இதனையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.